தூத்துக்குடியில் பரபரப்பு…! அழும் குழந்தையைச் சமாதானப்படுத்திய தாய்க்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தூத்துக்குடியில் பரபரப்பு…! அழும் குழந்தையைச் சமாதானப்படுத்திய தாய்க்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், அழும் தன் குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காக மனைவியுடன் குழந்தையை பைக்கில் ஏற்றிக்கொண்டு வெளியே ஒரு ரவுண்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற பைக் மீது ஒரு வாகனம் பலமாக மோதியதில், பைக்கில் இருந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மீ மீட்புக் குழுவினர், காயமடைந்த மூவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிவசங்கரின் மனைவி சுபிக்‌ஷா பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தையைச் சமாதானப்படுத்தச் சென்ற இடத்தில் தாயை இழந்து நிற்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் பெருஞ்சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in