CRIME
“அடச்சீ வயசான காலத்துல இப்படியா..?” 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. 67 வயது முதியவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த 67 வயதான தங்கையாதவமணி என்ற ஞானதுரை என்பவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இவரை உடனடியாகக் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
