ஐயோ கடவுளே.. ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… காதலன் கொடுத்த அந்த ஒரு மாத்திரை… 30 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… காதலன் கொடுத்த அந்த ஒரு மாத்திரை… 30 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்ற வாலிபர், தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து அந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்த நிலையில் அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். குடும்பத்தினருக்குத் தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில், மருத்துவரின் ஆலோசனையின்றி நாகசாய் கொடுத்த கருத்தடை மாத்திரைகளை அந்த இளம்பெண் உட்கொண்டுள்ளார்.

மாத்திரையைச் சாப்பிட்ட சில நாட்களில் இளம்பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மிக மோசமடைந்தது. அவரது தோழர்கள் அவரை மீட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் காக்கிநாடா அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவ ஆலோசனையின்றி ஆபத்தான மருந்துகளை வழங்கிய குற்றத்திற்காகத் தலைமறைவாக இருந்த காதலன் நாகசாயை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in