CRIME
“ஐயோ கொடுமையே.. ஒரு மாதமாக ஜன்னல் வழியே நோட்டமிட்ட பைக் மெக்கானிக்!” நள்ளிரவு 12:30 மணிக்கு அறைக்குள் புகுந்து 21 வயது செவிலியரை வன்கொடுமை செய்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஐதராபாத் துக்குகூடாவில் உள்ள பிரைம் கேர் மருத்துவமனையில் செவிலியராகபணியாற்றி வந்த 21 வயது இளம் பெண், பாலியல் வன்புணர்ச்சி முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 34 வயது பைக் மெக்கானிக்கால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சனாவுல்லா என்ற அந்த மெக்கானிக், மருத்துவமனைக்கு அருகில் இருந்த தனது பைக் கடையில் இருந்தபடி கடந்த ஒரு மாத காலமாக அந்தச் செவிலியரின் நடமாட்டத்தைத் திட்டமிட்டு நோட்டமிட்டு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 29 நள்ளிரவு 12:30 மணியளவில், செவிலியர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே அத்துமீறி நுழைந்த சனாவுல்லா, அவரைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண் அலறியதால், அவரது வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொடூரக் கொலை செய்ததோடு, மயக்கமடைந்த பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சியும் செய்துவிட்டு ஜன்னல் வழியாகவே தப்பியோடியுள்ளார்.
மறுநாள் காலையில் செவிலியர் அறையை விட்டு வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, அவர் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து பஹாதி ஷெரீப் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஐதராபாத் மாநகரக் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜானார் மேற்பார்வையில் சாம்ஷாபாத் மண்டல டிசிபி பி. ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவத்தின் போது செவிலியர் கடித்ததில் குற்றவாளியின் கையில் ஏற்பட்ட காயம் மற்றும் தடய அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், புகார் பெற்ற 30 மணி நேரத்திற்குள் கொலையாளி சனாவுல்லாவை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது.
