CRIME
“ஐயோ கடவுளே.. போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பி கைதி..” 22 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் விபரீத சம்பவம்..!!
ஹைதராபாத் சஞ்சல்குடா மத்திய சிறையில் போக்ஸோ வழக்கில் அடைக்கப்பட்டிருந்த 22 வயது கைதி கிஷோர் குமார் ரெட்டி, எர்ரகட்டா அரசு மனநல மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி, இறுதியில் மரத்தின் மீது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் சக கைதிகளுடன் தகராறில் ஈடுபட்டதால், மருத்துவப் பரிசோதனைக்காக அவர் எர்ரகட்டா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கழிவறைக்குச் செல்வதாகக் கூறி, அதன் வென்டிலேட்டர் வழியாகப் போலீசாரின் பாதுகாப்பை மீறி அவர் தப்பியோடினார். இதற்கு முன்பும் அவர் மாவட்டச் சிறையின் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்துத் தப்பியோடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையிலிருந்து தப்பிய கிஷோர் குமார் ரெட்டி, வனபர்த்தி மாவட்டம் அமரசிந்தா மண்டலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான நந்திமல்லாக்கிற்குச் சென்றுள்ளார். அங்குத் தேடுதல் வேட்டைக்காகப் போலீசாரின் ரோந்து வாகனம் வந்திருப்பதை எதிர்பாராதவிதமாகக் கண்ட அவர், கடும் பயமும் பதற்றமும் அடைந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாத குழப்பமான சூழ்நிலையில், கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, அவரது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது
