CRIME
“உச்சகட்ட அதிர்ச்சி..! கணவன் கண்முன்னே மனைவி எடுத்த விபரீத முடிவு..” நீதிமன்ற வளாகமே அதிர்ந்த சம்பவம் .. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில், கணவனுடனான குடும்பத் தகராறு வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க வந்த பெண் ஒருவர் நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. டேராடூனின் நியூ கேண்ட் சாலையில் உள்ள விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவர் சஞ்சீவ் குமாருக்கும் இடையே நீதிமன்றத்தில் நீண்ட காலமாகத் குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த மீனாட்சி, திடீரென நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்த போலீஸார் உடனடியாக மீட்டு டேராடூன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். வலது கையில் முறிவு மற்றும் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனாட்சி, எந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
