அடச்சீ..”இரவில் தனியா வா பாஸ் பண்ண வைக்கிறேன்..!” 8-ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஹெட்மாஸ்டர்.. பிடித்து வெளுத்து வாங்கிய மக்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ..”இரவில் தனியா வா பாஸ் பண்ண வைக்கிறேன்..!” 8-ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஹெட்மாஸ்டர்.. பிடித்து வெளுத்து வாங்கிய மக்கள்..!!

Published

on

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் மீது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பரோலி காவல் எல்லைக்குட்பட்ட பகேஜி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முதல்வர் சஞ்சய் குமார் திரிவேதி, எட்டாம் வகுப்பு மாணவியிடம் மொபைல் போன் எண் கேட்டதாகவும், போனில் அநாகரிகமாகப் பேசி, தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி இரவில் சந்திக்க வருமாறு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், கோபமடைந்த கிராம மக்கள் பள்ளி முதல்வரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். காவல்துறையினர் அந்த மாணவி மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். இந்த முதல்வர் இதற்கு முன் பணியாற்றிய பள்ளியிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்ததாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இக்குற்றச்சாட்டுகள் குறித்துக் காவல்துறைத் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Advertisement

இச்சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கல்வித் துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டக் கல்வி அதிகாரி, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வட்டாரக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், விசாரணையில் தவறு நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in