“கடன் வாங்கிய பணத்திற்காக இப்படியா..?” பெற்றோரின் கண்முன்னே 6 மாதக் குழந்தையை நேர்ந்த விபரீதம்.. கந்துவட்டிக் கும்பலின் வெறிச்செயலால் அதிர்ந்தபோன கிராமம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கடன் வாங்கிய பணத்திற்காக இப்படியா..?” பெற்றோரின் கண்முன்னே 6 மாதக் குழந்தையை நேர்ந்த விபரீதம்.. கந்துவட்டிக் கும்பலின் வெறிச்செயலால் அதிர்ந்தபோன கிராமம்..!!

Published

on

திருப்பதி மாவட்டம் தொட்டம்பேடு மண்டலத்திற்கு உட்பட்ட சிவநாதபாலம் கிராமத்தில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ஆறு மாதக் குழந்தையைக் கந்துவட்டிக் கும்பல் வீடு புகுந்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆதி மற்றும் மேகமாலா தம்பதியினர், சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே வசிக்கும் வெங்கடகிரி, முனியம்மா, பிரசாத் மற்றும் மோகன் ஆகியோரிடம் ஐந்து ரூபாய் வட்டிக்கு 1,50,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடன் தொகையின் அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரமடைந்த அந்தக் கந்துவட்டிக் கும்பல், சிவநாதபாலத்தில் உள்ள ஆதி – மேகமாலா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அவர்களது 6 மாதப் பச்சிளம் குழந்தையைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த பெற்றோர் உடனடியாக அவசர உதவி எண்ணான ‘டயல் 100’ மூலமாகக் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in