அடக்கடவுளே…! வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுவன்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்துபோன மருத்துவர்கள்… ஐதராபாத்தில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே…! வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுவன்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்துபோன மருத்துவர்கள்… ஐதராபாத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் தீவிர வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர்.

அங்கு அவரது வயிற்றை ‘எக்ஸ்ரே’ எடுத்து டாக்டர்கள் பார்த்தனர். அப்போது சிறுவனின் வயிற்றில் 3 ‘பிளேடு’ துண்டுகள் இருப்பது கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

மேலும், ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சையின் மூலமாக வயிற்றில் இருந்த பிளேடு துண்டுகளை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனநிலை சரியில்லாததால் அச்சிறுவன் பிளேடுகளை விழுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in