CINEMA
ரேப் செஞ்சவனுக்கு இந்த மரியாதையா…? பல பெண்களை சீரழிச்சிட்டு கூலிங் கிளாஸ் பேட்டி கொடுக்கிறான் அந்த இயக்குனர்.. கேக் ஊட்டுறீங்க… கோலிவுட்டை அதிர வைக்கும் பிரபல பாடகியின் பதிவு..!!
பாடகி ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ். என்பவரைக் குறிப்பிட்டுத்தான் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசிய ஸ்வாகதா, சம்பந்தப்பட்ட நபரை “மெட்ராஸின் எப்ஸ்டீன்” என்று குறிப்பிட்டிருந்தாரே தவிர, நேரடியாக யாருடைய பெயரையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரிப் பதிவு, அந்த இசையமைப்பாளரைத் துல்லியமாக அடையாளம் காட்டும் வகையில் அமைந்துள்ளதாகத் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த இசையமைப்பாளர் அண்மையில் ஒரு பக்திப் படத்திற்கு இசையமைத்து வெற்றியடைந்துள்ள சூழலில், அவருக்குப் பொதுவெளியில் மகளிர் கேக் ஊட்டி வரவேற்பு அளித்த நிகழ்வுகளைக் கண்டித்தே ஸ்வாகதா இந்த ஆதங்கப் பதிவை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இவருடைய இந்தத் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புதிய இன்ஸ்டா பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
