“தப்பு செஞ்ச யாரையும் விடக்கூடாது” கே.என். நேருவை தொடர்ந்து அடுத்து… செந்தில் பாலாஜிக்கு சுருக்கு வளையம்..? தமிழக அரசியலில் புயலை கிளப்பும் தவெக அரசின் அடுத்த மெகா பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தப்பு செஞ்ச யாரையும் விடக்கூடாது” கே.என். நேருவை தொடர்ந்து அடுத்து… செந்தில் பாலாஜிக்கு சுருக்கு வளையம்..? தமிழக அரசியலில் புயலை கிளப்பும் தவெக அரசின் அடுத்த மெகா பிளான்..!!

Published

on

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக அரசின் அடுத்த டார்கெட் யார் என்பது குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜியை நோக்கித் தவெக அரசு தனது கவனத்தைத் திருப்பியுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கடந்த காலங்களில் குதிரை பேரம் உள்ளிட்ட செந்தில் பாலாஜி தொடர்பான ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை உடனடியாக நீக்குவதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு வழக்கறிஞர்கள் விரைந்து எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தற்பொழுது அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் செந்தில் பாலாஜி மீதான பிடியை இறுக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

வழக்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடைகளை சட்ட ரீதியாக நீக்கியதைத் தொடர்ந்து, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் செந்தில் பாலாஜியைக் கைது செய்யவும் தவெக அரசு தீவிரமாக ஆயத்தமாகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கே.என். நேருவைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியையும் குறிவைத்து தவெக அரசு காய்நகர்த்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in