CRIME
“நாடே அதிர்ச்சி.. வீட்டுக்கு பக்கத்துல குடிக்காதீங்க..” தட்டிக்கேட்ட 70 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. மது போதையில் மிருகங்களாக மாறிய வாலிபர்கள்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் பகுதியில், தன் வீட்டிற்கு அருகே மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட 70 வயது மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் செப்டம்பர் 25–26 தேதிகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது வீட்டிற்கு அருகில் இருவர் மது அருந்திக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த மூதாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த சமூக விரோதிகள், மூதாட்டியைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தாக்குதலின் போது தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைக்குத் பிறகு, மூதாட்டியின் சடலத்தைப் பாதி ஆடையற்ற நிலையில் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று, வீட்டின் பின்புறம் இருந்த புதர்களுக்குள் வீசிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ராஜேஷ் என்ற குத்து (30) மற்றும் ஹரிராம் ராவத் (34) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
