CRIME
அடக்கொடுமையே.. தோழியை பார்க்கப்போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவால் விடிவிடிய நடந்த போலீஸ் வேட்டை..! சிக்கிய முக்கிய குற்றவாளி..!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம், திகல்பேங்க் காவல் எல்லைக்குட்பட்ட துளசியா ஹால்ட் ரயில் நிலையம் அருகே, இளம்பெண் ஒருவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சிலர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சுமார் 4 முதல் 5 மாதங்கள் பழமையானது எனக் கூறப்படுகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு இந்த வீடியோ வந்தடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கி தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை இரவு நேரத்திலேயே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் 5 முதன்மை குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 21 வயதான ஷாஜாத் என்ற முக்கிய குற்றவாளி தஹிபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குற்றவாளிகளான அப்சர் (குஜராத்), சுபேர் கான் (ஹரியானா), மிஜான் (கர்நாடகா) மற்றும் காமில் (பஞ்சாப்) ஆகியோர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்கத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கண்டறிந்து அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். விசாரணையில், தான் தனது தோழியைச் சந்திப்பதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்றதாகவும், அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கைத் கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
