“நள்ளிரவில் ஆபாச மெசேஜ்”… பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை.. போக்சோவில் கைதான காமகொடூர ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் ஆபாச மெசேஜ்”… பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை.. போக்சோவில் கைதான காமகொடூர ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாகக் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தங்கவேல். இவர் அதே பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் செல்போனுக்கு நள்ளிரவு நேரங்களில் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஆசிரியர் தங்கவேல் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். அச்சமடைந்த மாணவி இதுகுறித்துத் தன் தோழிகளிடம் தெரிவிக்க, விஷயம் மற்ற ஆசிரியர்களின் கவனத்திற்குச் சென்றுள்ளது. அவர்கள் தங்கவேலைக் கடுமையாகக் கண்டித்தும், அவர் தனது அத்துமீறல்களை நிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisement

இதனால் பொறுமையிழந்த மாணவி, தமக்கு நேர்ந்த கொடுமைகளைத் தன் பெற்றோரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டுத் தலைமை ஆசிரியரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி நியாயம் கேட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ஆசிரியர் தங்கவேல் செய்த அத்துமீறல்கள் அனைத்தும் உறுதியாயின. இதையடுத்து, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில், இவர் ஏற்கனவே பல பள்ளிகளில் இதேபோன்று மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்துப் புகார்களில் சிக்கி, இடமாறுதல் ஆகி இங்கு வந்தவர் என்ற அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in