CRIME
ஐயோ கொடுமை..! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. பதறி அடித்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்… பெற்ற தாயைக் கத்தியால் குத்திக் கொன்ற 19 வயது மகன்.. கஞ்சா போதையில் நடந்த பயங்கரம்..!
தருமபுரி அருகே கஞ்சா போதையில் இருந்த தேவராஜ் (19) என்ற இளைஞர், தனது பெற்ற தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த தாயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தேவராஜைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட தேவராஜ் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு போலீசாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் சிறை சென்ற இவர், சில தினங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளியே வந்து இந்த கொடூர குற்றத்தைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
