திருமணமான 2-வது மாதமே இப்படியா..? “வேலைக்கு போகக் கூடாது” என கணவன், பெற்றோர் மிரட்டல்… புதுப்பெண் எடுத்த விபரித முடிவால் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

திருமணமான 2-வது மாதமே இப்படியா..? “வேலைக்கு போகக் கூடாது” என கணவன், பெற்றோர் மிரட்டல்… புதுப்பெண் எடுத்த விபரித முடிவால் அதிர்ச்சி..!!

Published

on

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே திருமணமான இரண்டு மாதங்களில் புதுப்பெண் ஒருவர் வேலைக்குச் செல்லக் கூடாது என்று கணவர் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடு விதித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் மோகனப்பிரியா (20 வயது) தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அம்மாபாளையத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பும் பின்பும் மோகனப்பிரியா தொடர்ந்து அரூரில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். ஆனால், அவரது கணவர் தென்னரசு அவரை வேலைக்குச் செல்லக் கூடாது என்று தடுத்துள்ளார். இதனால் பெற்றோர் வீட்டிற்கு வந்த மோகனப்பிரியாவிடம், அவரது பெற்றோரும் கணவரின் பேச்சைக் கேட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

தன்னுடைய வேலைக்கு குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் மனமுடைந்த மோகனப்பிரியா, பெற்றோர் வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in