CRIME
அடக்கடவுளே.. வாசல் படியில் காத்திருந்த தாய்.. சடலமாக வந்த 3 மகள்கள்.. திருவிழா கூட்டத்தில் நடந்த கொடூரம்..திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் பிரோசாபாத் மாவட்டத்தின் சத்தன்பூர் கிராமத்தில், ‘தேசு-ஜான்ஜி’ திருவிழா சிலை ஊர்வலத்தின் போது அதிவேகமாக வந்த பிரெஸ்ஸா கார் மோதி மூன்று சகோதரிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை இரவு, கிராம மக்கள் அனைவரும் கூட்டு வழிபாட்டுத் திருமணச் சடங்குகளை முடித்துவிட்டு மகிழ்ச்சியோடு சிலைகளை விசர்ஜனம் செய்யச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்று சாலையோரமாக நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியதில் பப்லி என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றார், ஆனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரைத் துரத்தியதால், அவர் காரை பின்னோக்கித் திருப்பி மீண்டும் கூட்டத்தின் மீது ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் கொடூர சம்பவத்தில் பப்லி, அகான்க்சா, அஞ்சலி ஆகிய மூன்று சகோதரிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஒரே பிரசவத்தில் வளர்த்த மூன்று மகள்களையும் இழந்துவிட்டு, அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று வாசலில் காத்திருந்த தாயின் அழுகுரல் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கார் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்தவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
