LATEST NEWS
அடுத்த பரபரப்பு.! திமுக முன்னாள் எம்.எல்.ஏ நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… அடுத்தடுத்து சிக்கும் முக்கியப் புள்ளிகள்..!!
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடிச் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அணைக்கட்டு நந்தகுமாரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வேலூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை முதலே இந்த அதிரடிச் சோதனையானது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் 634 கோடி ரூபாய் மதிப்பிலான வேலைவாய்ப்பு முறைகேடு மற்றும் லஞ்சப் புகார் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அனுமதி அளித்ததை அடுத்தே, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் ஆகியோரின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
