LATEST NEWS
BREAKING : தமிழ்நாடெங்கும் அரசு அலுவலகங்களில் கோடிக் கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல்.. ஒரே நாளில் அதிர்ச்சி..!!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.28.24 லட்சம் ரொக்கப் பணம் நேரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதைக் கண்டறியும் வகையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஜி-பே (GPay) பரிவர்த்தனைகள் மூலமாக மட்டும் ரூ.89.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறையினரை அதிர வைத்துள்ளது.
