எனக்கும், சபரீசனுக்கும் தொடர்பு இருக்குனு நிரூபிச்சா… G Square மதிப்பு ரூ.10000 கோடி.. என் கம்பெனியோட 50% ஷேர் தரேன்.. ஜி ஸ்கொயர் அதிபர் பால ராமஜெயம் பகிரங்க சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எனக்கும், சபரீசனுக்கும் தொடர்பு இருக்குனு நிரூபிச்சா… G Square மதிப்பு ரூ.10000 கோடி.. என் கம்பெனியோட 50% ஷேர் தரேன்.. ஜி ஸ்கொயர் அதிபர் பால ராமஜெயம் பகிரங்க சவால்..!!

Published

on

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், தமக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் எவ்விதத் தொழிலும், நிதித் தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் பால ராமஜெயம் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்பத்தினரின் பினாமியாகச் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அவர் இந்த அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பால ராமஜெயம், “எனக்கும் சபரீசனுக்கும் இடையில் வணிக ரீதியான தொடர்பு இருப்பதாக யாராவது நிரூபித்தால், எனது நிறுவனத்தின் 50% பங்குகளை அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக எழுதிக் கொடுக்கத் தயார்” என பகிரங்க சவால் விடுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தங்கள் நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் அரசியல் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

மிகக் குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அசுர வளர்ச்சி பெற்ற இந்த நிறுவனம், முந்தைய அதிமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது என்றும், தங்களின் கடின உழைப்பாலும் நேர்மையான தொழில் அணுகுமுறையாலும் மட்டுமே இந்த நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயத்தின் இந்த ஓபன் சேலஞ்ச், தற்போதைய தமிழக அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in