“ஆம்ஸ்ட்ராங்னு சொன்னாலே சேகர்பாபு ஏன் பதறி எழுந்து நிக்கிறாரு?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி கேள்வி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆம்ஸ்ட்ராங்னு சொன்னாலே சேகர்பாபு ஏன் பதறி எழுந்து நிக்கிறாரு?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி கேள்வி…!!

Published

on

தமிழக சட்டப்பேரவை 2026 கூட்டத்தொடரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, சட்டப்பேரவையில் இரு தலைவர்களும் தங்களது வாதங்களை மிகத் தீவிரமாகப் பரிமாறிக்கொண்டனர்.

திமுக ஆட்சியில் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தும் திமுக ஏன் ஒப்படைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆம்ஸ்ட்ராங் என்று பெயர் சொன்னதுமே முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஏன் எழுந்து நிற்கிறார் என்றும் அவர் சட்டப்பேரவையில் அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பினார்.

Advertisement

இதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, ஆம்ஸ்ட்ராங்கும் நானும் ஒரே பகுதியில் வசித்தவர்கள் என்றும், எங்கள் வீட்டுச் சுக துக்க நிகழ்வுகளுக்கு அவர் வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். மேலும், அவர் படுகொலை செய்யப்பட்டவுடன் இறுதிச் சடங்குக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அருகில் இருந்து செய்து கொடுத்ததாகக் கூறிய அவர், தற்போது வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளதால், அவர்கள் என்ன சொன்னாலும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in