“ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்!” அதே போல தான் அந்த விஷயமும் இருக்கு… சட்டசபையில் கொந்தளித்த சிவி சண்முகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்!” அதே போல தான் அந்த விஷயமும் இருக்கு… சட்டசபையில் கொந்தளித்த சிவி சண்முகம்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இடைவிடாமல் பேசி தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வரும் நிலையில், அரசின் தற்போதைய செயல்பாடுகளை அவர் மிக விநோதமான ஒரு பழமொழியைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அரசை விமர்சித்து பேசிய சி.வி.சண்முகம், “ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்.. அது போல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனும், ஆனா அதை நடைமுறைப்படுத்தக் கூடாது” என்ற இரட்டை நிலைப்பாட்டில்தான் இன்றைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மிக அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசு வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவதாக அவர் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in