“அலார்ட்டா இருக்கணும்!.. நாங்க சரியில்லைனுதானே இங்க உட்கார வச்சிருக்காங்க..” எ.வ.வேலுவின் சட்டசபை பேச்சால் அப்செட்டான திமுக தலைமை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அலார்ட்டா இருக்கணும்!.. நாங்க சரியில்லைனுதானே இங்க உட்கார வச்சிருக்காங்க..” எ.வ.வேலுவின் சட்டசபை பேச்சால் அப்செட்டான திமுக தலைமை..!!

Published

on

தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுகின்றன. எனவே பலரும் சட்டசபை நிகழ்வுகளை பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சட்டசபை நடைபெறும் போது தியேட்டர்களில் காலை காட்சிக்கான கூட்டமே இல்லை எனவும் சொல்கிறார்கள். சில பெண்கள் சீரியல் பார்ப்பதை விட்டுவிட்டு சட்டசபை நிகழ்வுகளை பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. சட்டசபையில் தவெகவும், திமுகவும் கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். ஒருவரின் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள். திமுகவை பொருத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா ஏ.வ.வேலு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர்தான் அதிகமாக பேசுகிறார்கள்.

அதேநேரம் ஏ.வ.வேலு பேசும் போது அடக்கி வாசிக்கிறார். தவெகவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை அவர் வைப்பதில்லை. அதுவும் சமீபத்தில் ‘நாங்க சரியில்லை என்றுதானே மக்கள் எங்களை இங்கே உட்கார வைத்திருக்கிறார்கள்’ என்று கூறி தவெக எம்.எல்.ஏக்களை சிரிக்க வைத்தார்.

Advertisement

இப்படி எ.வ.வேலுவின் சட்டசபை செயல்பாடுகள் திமுக தலைமைக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவரை கூப்பிட்டு இதுபற்றி கேட்டபோது ‘உடனடியாக தடாலடியாக போக வேண்டாம்.. கடந்த காலத்தில் அதிமுகவுடன் எப்படி நாம் நடந்து கொண்டோமோ அது போலவே இவர்களுடன் போவோம்’ என்று சொன்னாராம். இதைக் கேட்டு திமுக தலைமை ஜெர்க் ஆனதாக சொல்லப்படுகிறது. கடந்த காலத்தில் அதிமுகவை குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை சட்டமன்றத்தில் வைத்த வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோரின் மீது வழக்குகள் பாய்ந்தன. நாம் அப்படி சிக்கிவிடக்கூடாது என எ.வ.வேலு கருதுகிறாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in