LATEST NEWS
“அய்யோ கடவுளே.. பள்ளி முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் நேர்ந்த கொடூரம்..! அதிவேக லாரி கவிழ்ந்து ஒருவர் பலி… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சிகள்..!!
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா தாலுகாவில் உள்ள ஹகலாகேரே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முடிவதற்குக் சரியாக 10 நிமிடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம், பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது. இதில் ஹகலாகேரே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ஹொசதுர்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீராம்பூர் காவல் நிலையப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://www.facebook.com/watch/?v=1610497067379104
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், குழந்தைகள் பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதும், எதிரே உள்ள சாலையின் ஓரத்தில் சிலர் நின்று கொண்டிருப்பதும் தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி வேகமாகக் கவிழ்ந்து அங்கிருந்தவர்களை நசுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாகக் கட்டுப்பாடற்ற லாரி பள்ளியின் வெளிப்புறச் சுவர் திசையில் சாய்ந்து இழுத்துச் செல்லப்படவில்லை; அப்படிச் சென்றிருந்தால் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் லாரியின் அடியில் சிக்கி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
