“அதிகாலையிலே பயங்கரம்.. காவல் நிலையம் அருகிலேயே ‘சரித்திர பதிவேடு குற்றவாளி’ ஓட ஓட விரட்டி நேர்ந்த கொடூரம்..” 5 பேர் கும்பலின் வெறிச்செயல்.. மதுரையில் பார்ப்ப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“அதிகாலையிலே பயங்கரம்.. காவல் நிலையம் அருகிலேயே ‘சரித்திர பதிவேடு குற்றவாளி’ ஓட ஓட விரட்டி நேர்ந்த கொடூரம்..” 5 பேர் கும்பலின் வெறிச்செயல்.. மதுரையில் பார்ப்ப்பு..!!

Published

on

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ‘சரித்திர பதிவேடு குற்றவாளி’ சப்பாணி சரவணன் (50) என்பவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஓட ஓட விரட்டி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகேயுள்ள பிரதான சாலையில் இந்த பயங்கரக் கொலை அரங்கேறியுள்ளது. சப்பாணி சரவணன் வழக்கம்போல் டீ குடிக்கச் சென்றபோது, அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்த மர்ம கும்பல் வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்து சரமாரியாக வெட்டியுள்ளது.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் அலறியடித்து ஓடியபோதும், விடாமல் துரத்திய அந்த கும்பல் நடுரோட்டில் வைத்து அவரை வெட்டிச் சாய்த்துக் கொன்றுவிட்டுத் தப்பியோடியது. காவல் நிலையம் அருகிலேயே அதிகாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இக்கொலை நடந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களைக் கைப்பற்றியதோடு, துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in