“ஆத்துல வெள்ளம் வந்தா என்ன, படிப்பு முக்கியம்..!” கிராம மாணவர்களுக்காக 9 மாத குழந்தையுடன் உயிரைப் பணயம் வைக்கும் பெண் ஆசிரியர்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆத்துல வெள்ளம் வந்தா என்ன, படிப்பு முக்கியம்..!” கிராம மாணவர்களுக்காக 9 மாத குழந்தையுடன் உயிரைப் பணயம் வைக்கும் பெண் ஆசிரியர்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில், மழைக்காலத்திலும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, தினமும் ஆற்றைக் கடந்து சென்று குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் இரண்டு பெண் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த நாட்டின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வத்ராஃப்நகர் ஒன்றியத்தில் உள்ள தௌர்பூர் என்ற குக்கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால், மொரான் மற்றும் இரியா ஆகிய இரு ஆறுகள் இணையும் பகுதியைத் தாண்டியே ஆக வேண்டும். மழைக்காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், அந்த இரு ஆசிரியர்களும் தினமும் கரடுமுரடான பாறைகள் நிறைந்த பாதையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம் என்னவென்றால், அந்த ஆசிரியர்களில் ஒருவர் தனது 9 மாதக் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடியே, அந்தப் அகலமான ஆற்றின் வெள்ள நீரைக் கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். கல்விப் பணியைத் தங்களின் உயிராகக் கருதி, எவ்வித வசதிகளும் இல்லாத கிராமத்து மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்த பெண் ஆசிரியர்கள் காட்டும் அசாதாரண அர்ப்பணிப்பு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in