“கள்ளகாதலியோட ஓடிப்போயிட்டான்” ஆட்டோ ஓட்டப் போன கணவர் 50 நாட்களாகக் காணல… 3 பிள்ளைகளுடன் கண்ணீர் மல்க மனைவி போலீசில் புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கள்ளகாதலியோட ஓடிப்போயிட்டான்” ஆட்டோ ஓட்டப் போன கணவர் 50 நாட்களாகக் காணல… 3 பிள்ளைகளுடன் கண்ணீர் மல்க மனைவி போலீசில் புகார்..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் அனனம்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், 50 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு 3 பிள்ளைகளுடன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இவருக்கும் ஜெய் பிரகாஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சவாரிக்காகச் சென்ற பிரகாஷ் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து திவ்யா ஏற்கனவே பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஓராண்டாக அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண்ணுடன் பிரகாஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், தங்களது தனிப்பட்ட விசாரணையில் அவர் அந்தப் பெண்ணுடன் ஓடியிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளதாகவும் திவ்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த கணவர் காணாமல் போனதால், 3 பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவு மற்றும் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக திவ்யா வேதனை தெரிவித்துள்ளார். எனவே, தனது புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, காணாமல் போன கணவரை மீட்டுத் தர வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in