மனசாட்சியே இல்லையா..? ஆடைகளின்றி குளத்தில் இறங்கி மீன்களுக்கு பாலியல் தொல்லை.. கர்ப்பிணி நாயை கூட விட்டு வைக்கல… சைக்கோ நபரின் பகீர் வாக்குமூலம்! – cinefeeds
Connect with us

CRIME

மனசாட்சியே இல்லையா..? ஆடைகளின்றி குளத்தில் இறங்கி மீன்களுக்கு பாலியல் தொல்லை.. கர்ப்பிணி நாயை கூட விட்டு வைக்கல… சைக்கோ நபரின் பகீர் வாக்குமூலம்!

Published

on

தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில், 51 வயதான சுத்திச்சாய் பூன்லெர்ட் என்ற நபர், பக்கத்து வீட்டுக்காரரின் குளத்தில் இருந்த மதிப்புமிக்க கோய் வகை மீன்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குளத்தில் ஆடைகளின்றி இறங்கி அவர் செய்த இந்த விசித்திரமான கொடூரம், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணையின் போது அந்த நபர், தனக்குக் காதலி இல்லை என்றும், பாலியல் தொழிலாளர்களுக்குப் பணம் கொடுக்க வசதி இல்லாததாலும், போதைப்பொருள் தாக்கத்தாலும் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். மேலும், தான் குளிக்க மட்டுமே சென்றதாகவும், மீன்கள் அருகில் நீந்தியபோது உணர்ச்சிகள் தூண்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கர்ப்பிணி நாயிடமும் இதேபோன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுப் போலீசாரிடம் கைதான திடுக்கிடும் உண்மையையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

பாதிக்கப்பட்ட மீன்களின் உரிமையாளர் பாபி கூறுகையில், கடந்த சில நாட்களாகத் தனது வளர்ப்பு மீன்கள் உடலில் காயங்களுடன் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே சிசிடிவி காட்சிகளைச் சோதித்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுத்திச்சாய் மீது விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in