நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! வெறும் 2 சென்ட் நிலத்துக்காக… இரண்டரை வயதுக் குழந்தை செங்கலால் அடித்துக் கொலை… பீகாரில் அரங்கேறிய பயங்கரம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! வெறும் 2 சென்ட் நிலத்துக்காக… இரண்டரை வயதுக் குழந்தை செங்கலால் அடித்துக் கொலை… பீகாரில் அரங்கேறிய பயங்கரம்..!

Published

on

பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டு சென்ட் நிலத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷியோஹர் மாவட்டம், தரியானி காவல் எல்லைக்குட்பட்ட பராஹி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தத் துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

நிலத் தகராறு தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அந்த ஆத்திரத்தில், எதிர் தரப்பைச் சேர்ந்த ரேணு தேவி என்ற பெண், விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தையின் மீது செங்கலை வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை முசாபர்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.

Advertisement

தகவலறிந்து வந்த தரியானி காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து வரும் நிலையில், இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in