“மகன்கள் எச்சரித்தும் கேட்காத காமுகன்..!” 50 வயது தாயை நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்.. திடுக்கிடும் பிண்ணனி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மகன்கள் எச்சரித்தும் கேட்காத காமுகன்..!” 50 வயது தாயை நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்.. திடுக்கிடும் பிண்ணனி..!!

Published

on

கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரின் சேகரப்பா நகரில், நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாகரத்னம்மா (50) என்ற பெண்மணி, தனக்குத் தெரிந்த நாகராஜ் நாயக் என்ற நபரால் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜகலூர் பகுதியைச் சேர்ந்த நாகரத்னம்மா, தனது கணவரைப் பிரிந்து மூன்று மகன்களைத் தனியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். பூ விற்றும், வீட்டு வேலைகள் செய்தும் பிழைப்பு நடத்தி வந்த இவருடைய வீட்டிற்கு நாகராஜ் நாயக் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதற்கு நாகரத்னம்மாவின் மகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்ததோடு, அவர் மீது ஏற்கனவே 5 புகார்களும், ஒரு திருட்டுப் புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், அந்தப் புகார்களைப் பொருட்படுத்தாமல் நாகராஜ் நாயக் தொடர்ந்து நாகரத்னம்மாவிற்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை, மதுபோதையில் நாகரத்னம்மாவின் வீட்டிற்குள் நுழைந்த நாகராஜுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட முயன்றபோது, நாகரத்னம்மா தப்பிக்க வீட்டின் மேல் மாடியை நோக்கி ஓடியுள்ளார். ஆனால், விடாமல் துரத்திச் சென்ற நாகராஜ், மாடி நுழைவாயிலில் வைத்தே அவரை கொடூரமாக வெட்டித் தீர்த்ததில் நாகரத்னம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொலையாளி நாகராஜ் அரிவாளுடன் சாலையில் நடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகப் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து, மரத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்திய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in