CRIME
சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்த இளம்பெண்.. அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற 23 வயது இளம்பெண், சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வர்ஷா (23) என்ற அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சக்லேஷ்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி சுற்றுலாப் பயணத்தை என்ஜாய் செய்துள்ளார். அப்போது, குளிக்கச் செல்வதற்கு முன்னதாக அவர் ஒரு சாக்லேட்டைச் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்துவிட்டு குளியலறை நோக்கி நடந்தபோது, எதிர்பாராதவிதமாக வர்ஷா திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வர்ஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வர்ஷாவின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மரணம் (Unnatural Death) என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இளம்பெண்ணின் திடீர் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
