“இவனெல்லாம் ஒரு மகனா..?!” பெற்ற தந்தை என்றும் பாராமல்… 85 வயது முதியவரை உதைத்து, குத்திய மகன்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“இவனெல்லாம் ஒரு மகனா..?!” பெற்ற தந்தை என்றும் பாராமல்… 85 வயது முதியவரை உதைத்து, குத்திய மகன்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் உள்ள காமசின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓஜா நகரில், சொத்து தகராறு காரணமாக 85 வயது முதிய தந்தையை அவரது பெற்ற மகனே கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 16 அன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக வெளியான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைத்துள்ளதுடன் பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில், பெற்ற தந்தை என்றும் பாராமல் முதியவரை அவரது மகன் கால்களால் உதைத்தும், கைகளால் குத்தியும் கொடூரமாகத் தாக்குவது பதிவாகியுள்ளது. அத்தோடு நிறுத்தாமல், அந்த முதியவரை தரதரவென இழுத்துச் சென்று சித்திரவதை செய்யும் வெட்கக்கேடான செயலும் அதில் தெளிவாகத் தெரிகிறது. குடும்ப உறவுகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்தப் பாசக்கார மகன் மீது காமசின் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in