“அடச்சீ நீயெல்லாம் தாயா..?” 20 வயது தாய்க்கு கழிவறையில் ரகசிய பிரசவம்… குப்பைப்பையில் மீட்கப்பட்ட ரத்தக் கறை படிந்த பச்சிளம் குழந்தை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் தாயா..?” 20 வயது தாய்க்கு கழிவறையில் ரகசிய பிரசவம்… குப்பைப்பையில் மீட்கப்பட்ட ரத்தக் கறை படிந்த பச்சிளம் குழந்தை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள பெர்ரி நகரில், 20 வயது இளம்பெண்ணான ஸ்டெபானி உபால்டோ தான் வேலை பார்த்து வந்த குழந்தை காப்பகத்திலேயே பிரசவித்து, தனது பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகக் கொன்று குப்பைப்பையில் போட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செப்டம்பர் 15 அன்று, ‘ஏகோர்ன்ஸ் அண்ட் ஓக்ஸ்’ என்ற குழந்தை காப்பகத்தின் கழிவறைக்குள் ஸ்டெபானிக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார். குழந்தை பிறந்தவுடன் சத்தமாக அழுததாகவும், அந்த அழுகைச் சத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில், அவர் குழந்தையின் முகத்தில் பலத்த காயங்களை ஏற்படுத்திக் கொன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையைக் கொன்ற பிறகு, அதன் உடலை ஒரு பிளாஸ்டிக் குப்பைப்பையில் போட்டு மறைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல மீண்டும் தனது காப்பக வேலைக்குத் திரும்ப ஸ்டெபானி திட்டமிட்டிருந்தார். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கு நிற்காததால், அங்குள்ள ஊழியர்கள் அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபானி காப்பகத்தை விட்டுச் சென்ற பிறகு, அங்குள்ள கழிவறையில் குப்பைப்பையில் குழந்தை இறந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த செப்டம்பர் 17 அன்று ஸ்டெபானி உபால்டோவை முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in