“திக் திக் திக்.. 35,000 அடி உயரத்தில் விமானத்தில் தீ..!” நடுவானில் பயணிகள் அலறிய பயங்கர நொடி.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திக் திக் திக்.. 35,000 அடி உயரத்தில் விமானத்தில் தீ..!” நடுவானில் பயணிகள் அலறிய பயங்கர நொடி.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் வானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டால் அது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை விளக்கும் அதிரடி காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானத்தின் மேல்புற லக்கேஜ் அறையில் இருந்து திடீரென தீப்பிழம்புகளும் புகையும் வெளியேறுவதைக் கண்டு பயணிகள் அலறித் துடிப்பதும், பீதி பரவி தீயை அணைக்கப் போராடுவதும் அந்த விபரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கைப்பைக்குள் வைக்கப்படும் சிறிய லித்தியம்-அயன் பேட்டரிகளேஇந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இவை சேதமடையும் போதோ அல்லது அதிக வெப்பமடையும் போதோ ‘தெர்மல் ரன்அவே’ என்ற நிலையை எட்டி, தீ அணைக்கப்பட்ட பிறகும் மீண்டும் மீண்டும் பயங்கரமாகத் தீப்பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

இதன் தீவிரத்தை உணர்த்தும் ஒரு நிஜச் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. கடந்த செப்டம்பர் 17 அன்று, ஆம்ஸ்டர்டாமில் இருந்து குராசோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த கேஎல்எம் நிறுவனத்தின் KL735 விமானத்தில், பயணி ஒருவர் பயன்படுத்திய பவர் பேங்க் திடீரென வெடித்துத் தீப்பிடித்தது. விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்த போதிலும், விமானத்தின் உள்பகுதி சேதமடைந்ததால் அட்லாண்டிக் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த அந்த போயிங் விமானம் அவசரமாக மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கே திருப்பப்பட்டது. 35,000 அடி உயரத்தில் பறக்கும் போது அங்கு தீயை அணைக்க எந்தவொரு தீயணைப்பு வாகனமும் வராது என்பதால், நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விமானப் பணியாளர்களே அந்த அழுத்தப்பட்ட கேபினுக்குள் தீயைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஒரு சிறிய லித்தியம் பேட்டரி எவ்வளவு பெரிய பேராபத்தை விளைவிக்கும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in