“அய்யோ கடவுளே… எஞ்சினில் இருந்து வீசிய துர்நாற்றம்… செக் பண்ணி பார்த்தஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… ரயிலுக்குள் ஒளிந்திருந்த பகீர் மர்மம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ கடவுளே… எஞ்சினில் இருந்து வீசிய துர்நாற்றம்… செக் பண்ணி பார்த்தஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… ரயிலுக்குள் ஒளிந்திருந்த பகீர் மர்மம்..!!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகாரோ ரயில் நிலையத்தில், பாட்னா-ராஞ்சி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12365/66) ரயிலின் எஞ்சின் முன்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் அதன் வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்தபோது, கோமோ ரயில் நிலையத்தைக் கடக்கும் சமயத்திலேயே எஞ்சின் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை லோகோ பைலட் உணர்ந்துள்ளார். ஆரம்பத்தில் துர்நாற்றத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், போகாரோ ரயில் நிலையத்தை அடைந்ததும் எஞ்சின் முன்பகுதியை ஆய்வு செய்யுமாறு ஊழியர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

போகாரோ ரயில் நிலையத்தில் ரயில் ஊழியர்கள் எஞ்சினின் முன்பகுதி மற்றும் ‘கேட்டில் கார்டு’ அருகே சோதனையிட்டபோது, அங்கு பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை சிக்கியிருந்த அதிர்ச்சி காட்சி தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரு படைகளின் அதிகாரிகளும் எஞ்சின் பகுதியிலிருந்து அப்பெண்ணின் தலையை கவனமாக மீட்டு, தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

Advertisement

ஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் இதுகுறித்துத் தகவலளிக்கையில், துர்நாற்றம் குறித்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையிலேயே இந்தத் தலை கைப்பற்றப்பட்டதாகக் கூறினார். அப்பெண் ரயில் விபத்தில் சிக்கி அவரது தலை எஞ்சினில் மாட்டிக்கொண்டதா அல்லது இதில் ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண் யார் என்பதை அடையாளம் காண்பதற்காகச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான காணாமல் போன வழக்குகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் முழுமையான விசாரணைக்குப் பிறகே இதன் உண்மைத் தன்மை தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in