LATEST NEWS
தம்பி நீ ஒரு சப்ப பீஸ்..! உன்னை கைது செய்ய நீ ஒன்னும் பெரிய ஆள் இல்ல.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை நோக்கி மிகக் கடுமையான மற்றும் அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், “தம்பி, உன்னை கைது செய்யுற அளவுக்குலாம் நீ ஒன்னும் அவ்வளவு பெரிய ஆளே கிடையாது… நீ ஒரு சப்ப பீஸ்” என்று மேடையில் மிகவும் ஒருமையில் ஏளனம் செய்து பேசினார்.
மேலும் காவல்துறையின் செயல்பாடுகளைத் தனது பாணியில் கிண்டலடித்த அவர், “உன்னைக் கைது செய்து 10 மணி நேரம் சும்மா ரோட்டிலேயே சுற்றிக் கூட்டிட்டுப் போய், அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போன உடனே 10 நிமிடம் கூட ஒழுங்காக விசாரணை செய்யாமல், ‘கிளம்பு தம்பி’ என்று சொல்லி அனுப்பிட்டாங்க” என விமர்சித்தார். திமுக அரசு நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஆக்ரோஷமான பேச்சு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
