சீக்கிரமா வரோம்..! வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்… தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓப்பன் வார்னிங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீக்கிரமா வரோம்..! வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்… தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓப்பன் வார்னிங்..!!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசின் திமிர்தனத்திற்கும் ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் ஒரு நல்வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும், அவர்கள் செய்த அவதூறுகளுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கத் தாங்கள் காத்திருப்பதாகவும் மிக ஆவேசமாக திமுக முப்பெரும் விழாவில் முழங்கியுள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துப்பில்லாமல், ஆளுங்கட்சியான தவெக அரசு தங்களைப் பற்றித் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆணவப் போக்கிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், தாங்கள் மிக விரைவில் தேர்தல் களத்தில் வட்டியும் முதலுமாகப் பதிலடி கொடுக்க வரவிருக்கிறோம் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement

மேலும், தவெக அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை முற்றிலும் திசைதிருப்புவதற்காகவுமே இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது உரையில் சாடியுள்ளார். தவெகவின் இத்தகைய விமர்சனங்கள் தங்களின் தியாக வரலாற்றை எந்த வகையிலும் அசைத்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in