LATEST NEWS
காலையிலேயே ஷாக்..! அக்டோபர் 1 முதல் இவர்களுக்கு மானிய விலை கேஸ் சிலிண்டர் கிடையாது… அதிரடி அறிவிப்பு.!!!
ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்காத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சமையல் கியாஸ் மானியம் சென்றடைவதை உறுதி செய்ய, நுகர்வோருக்கு இந்த பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் முதல் நடைபெற்று வரும் இப்பணிகளுக்காகப் பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி 89.9 சதவீத நுகர்வோர் (27.43 கோடி பேர்) இந்த அங்கீகாரத்தை முடித்துவிட்டனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் தங்களது பதிவை முடிக்க அக்டோபர் 1 வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
