LATEST NEWS
“பெண்களால் சிலிண்டர் தூக்க முடியாது” என வேலை தர மறுத்த IOC-க்கு சவுக்கடி… ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
LPG ஆலையில் எரிபொருள் நிரப்பும் வேலை பெண் என்பதற்காக மறுக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண்களால் கேஸ் சிலிண்டரைத் தூக்க முடியாது என்று ஐஓசி நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “பெண்களால் சிலிண்டர்களைத் தூக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, பெண்களின் உடல் உழைப்புத் திறனைக் காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
பாலினப் பாகுபாடு காட்டி வேலை மறுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கான வேலைவாய்ப்புச் சமத்துவத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது
