LATEST NEWS
2031-இல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சி.. எல்லோரும் என் பின்னாடி வாங்க… விஜய்க்கு ஷாக் கொடுத்த அன்புமணி ராமஸ்..!!
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, “நீங்கள் ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு வாழ வேண்டும். எல்லோரும் எங்கள் பின்னால் வாருங்கள்” என்று அவர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்தும் தனது கருத்தைத் தெரிவித்தார். 2031ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும் வகையில் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்புமணியின் இந்தப் பேச்சு, பாமகவின் எதிர்கால அரசியல் இலக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
