LATEST NEWS
அதிமுகவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி… இபிஎஸ் கொடுத்த பதவி வேண்டாம்.. தூக்கியெறிந்த எஸ்பி வேலுமணி டீம்… செம குஷியில் சசிகலா, டிடிவி தினகரன்.!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் திரண்ட இந்த முக்கிய நிர்வாகிகள், தலைமைக்கு எதிராகக் கூட்டு சேர்ந்து இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தொடர் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்து சரிசெய்யாமல், எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கி வருவதாக இவர்கள் தங்களது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும், கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றால் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
தற்போதைய தலைமைக்கு எதிராகத் தக்க நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த அதிருப்தி நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். இபிஎஸ்-ஸின் தலைமைக்கு எதிராக முக்கியப் புள்ளிகள் ஒன்று திரண்டுள்ளதால், அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்து, கட்சிப் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.
