“முதல்வர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்… ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்தி பேசிய தவெக எம்.எல்.ஏ..!” சட்டப்பேரவையில் வெடித்த சர்ச்சையால் அதிமுக ஆவேச எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முதல்வர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்… ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்தி பேசிய தவெக எம்.எல்.ஏ..!” சட்டப்பேரவையில் வெடித்த சர்ச்சையால் அதிமுக ஆவேச எச்சரிக்கை..!!

Published

on

தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் இழிவாகப் பேசியுள்ள ஆளுங்கட்சியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரைத் தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரே இவ்வாறு பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் “ஏறு தழுவுதல்” பற்றிப் புரிதல் இல்லாமலா அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாக அன்றைய அதிமுக அரசு பெற்றுத் தந்த உரிமையை இழிவாகப் பேசிய உறுப்பினரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து ஏன் இன்னும் நீக்கவில்லை எனவும் வினவியுள்ளது.

Advertisement

மேலும், ஜல்லிக்கட்டுக்குத் தடை கொண்டு வர நினைக்கும் அரசு, அதற்கான முன்னோட்டமாகத் தனது சட்டமன்ற உறுப்பினரைப் பேச வைத்துள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவதாகவும், எனவே தனது கட்சி எம்.எல்.ஏ பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் தெளிவான நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in