CRIME
அய்யோ கடவுளே..! கணவனின் போனில் இருந்த ‘அந்த’ ஒரு போட்டோ.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. பூட்டிய அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹரியானா மாநிலம் குருகிராமில், ஏர் இந்தியா நிறுவன ஊழியரின் மனைவி கீர்த்திமயி மிஸ்ரா (44), தனது கணவரின் மொபைல் போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிறந்த கீர்த்திமயி, குருகிராமில் உள்ள ஸ்மார்ட் வேர்ல்ட் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவராகப் பணிபுரிந்து வந்தார். மும்பையைச் சேர்ந்த இவரது கணவர் யுவராஜ் சர்மா, ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் குரூ ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் கணவரின் போன் கேலரியை ஆய்வு செய்த கீர்த்திமயி, அதில் அவரது பெண் சக ஊழியருடன் யுவராஜ் நெருக்கமாக இருந்த புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கடுமையான அநாகரிக அராஜகக் குடும்பச் சண்டைக்குப் பிறகு, மிகுந்த ஆத்திரத்துடன் அருகிலிருந்த மற்றொரு அறைக்குச் சென்ற கீர்த்திமயி, கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், பால்கனி வழியாக எட்டிப்பார்த்த யுவராஜ், மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதவின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலைய போலீஸார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த விபரீதம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் கீர்த்திமயி வெளிநாடு செல்லவிருந்த தனது தம்பிக்கு பாசத்துடன் ராக்கி கயிறு கட்டியிருந்தார் என்ற உருக்கமான தகவல் பெரும் சோகத்தையும் விவாதப் புயலையும் கிளப்பியுள்ளது.
