CRIME
நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..! பட்டப்பகலில் விவசாயியை ஓட ஓட வெட்டிக்கொன்ற கொடூரம்.. ஹூப்பள்ளியை உலுக்கிய பகீர் சம்பவம்..! பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் லிங்கராஜநகரில் உள்ள சித்தேஸ்வரா பார்க் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் தாதாபீர் என்பவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அவர் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே, கூர்மையான ஆயுதங்களுடன் வந்த இருவர் அவரைத் தாக்கித் தப்பியோடினர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழைய முன்விரோதம் காரணமாகவே இந்தப் படுகொலை நடந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. இக்கொலை குறித்துப் பேசிய பலியான தாதாபீரின் சகோதரர் சாதிக், “எனது சகோதரருக்குப் பழைய முன்விரோதம் ஒன்று இருந்தது, ஆனால் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுவிட்டது. அவர் விவசாயம் செய்து கொண்டு மிஷ்ரிகோட்டி அருகே வசித்து வந்தார். அவர் எதற்காக ஹூப்பள்ளிக்கு வந்தார் என்று தெரியவில்லை” எனக் கூறினார். பலியான தாதாபீருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளையும், கொலைக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணையையும் விரைவுபடுத்தியுள்ளனர்.
