CRIME
“நான் சொல்லும்போதெல்லாம் என்கூட உல்லாசமா இருக்கனும்” என மிரட்டி அடம்பிடித்த வாலிபர்… கல்லூரி தோழி எடுத்த விபரீத முடிவு… தங்கைக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தை வைத்து போலீசார் அதிரடி வேட்டை… !!
கர்நாடக மாநிலம் பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ என்ற இளம்பெண், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது அவருடன் பயின்ற அபிஷேக் என்ற வாலிபருடன் வாணிஸ்ரீக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அபிஷேக் தனது நட்பைக் காதலாக மாற்ற முயன்றபோது, வாணிஸ்ரீ அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் வாணிஸ்ரீ வேலைக்காகப் பெங்களூரு சென்று தனியாக வசித்து வந்த நிலையிலும், அபிஷேக் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனைத் தட்டிக்கேட்ட வாணிஸ்ரீ, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக எச்சரித்ததால் ஆத்திரமடைந்த அபிஷேக், வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களைக் கிராபிக்ஸ் செய்து மிரட்டத் தொடங்கியுள்ளார். தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்றும், “நான் சொல்லும் போது என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்” என்றும், இல்லையென்றால் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் பெயரைச் சீரழித்து விடுவேன் என்றும் கொடூரமாக மிரட்டியுள்ளார். வாணிஸ்ரீ இந்த மிரட்டல்களுக்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அபிஷேக்கின் தொடர் அச்சுறுத்தலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்தில் இருந்த வாணிஸ்ரீ, தனது தங்கைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அருகில் உள்ள ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் வாணிஸ்ரீயின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் அபிஷேக்கின் மிரட்டல்கள் குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமைக்குக் காரணமானவனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வாணிஸ்ரீ எழுதியிருந்தது தெரியவந்தது. தற்போது தப்பியோடித் தலைமறைவாக இருக்கும் அபிஷேக்கைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
