LATEST NEWS
உலகையே அதிரவைத்த மருத்துவ மர்மம்..! “வயித்துல கட்டினு நினைச்சா கர்ப்பம்” குழந்தைக்கு தந்தை யார்..? இன்றுவரை துலங்காத மர்ம முடிச்சு… 5 வயதிலேயே தாயான லீனா மெடினாவின் திடுக்கிடும் வரலாறு..!!
கடந்த 1939-ஆம் ஆண்டில், பெரு நாட்டின் ஒரு ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்த திபுரெலோ மெடினா – விக்டோரியா தம்பதியினர், தங்களது 5 வயது மகள் லீனா மெடினாவின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியிருப்பதைக் கவனித்தனர். வயிற்றில் ஏதேனும் கட்டி இருக்குமோ என்ற பயத்தில் அவர்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது, அங்கு அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த 5 வயது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் 1939 மே 14 அன்று, லீனாவுக்குச் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், உலக மருத்துவ வரலாற்றிலேயே மிக இளவயதில் தாயான சிறுமி என்ற அறியப்பட்ட பதிவை லீனா மெடினா பெற்றார்.
இந்த விசித்திரமான கர்ப்பத்திற்குக் காரணம், லீனாவுக்கு ‘முன்கூட்டிய பருவமடைதல்’ எனப்படும் ஒரு அரிய மரபணுக் குறைபாடு இருந்ததுதான் என்று மருத்துவ உலகம் கருதுகிறது. இந்த பாதிப்பால் 10,000 குழந்தைகளில் ஒருவருக்கு உடலின் எலும்பு மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி மிக வேகமான முதிர்ச்சியை அடையும். லீனாவுக்கு வெறும் 8 மாதக் குழந்தையாக இருக்கும் போதே முதல் மாதவிடாய் தொடங்கியதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணமான கொடூரத் தாக்குதலை நடத்திய, குழந்தையின் தந்தை யார்? என்ற உண்மை இன்றுவரை ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. லீனாவின் தந்தை மீது சந்தேகம் எழுந்து அவர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
லீனாவுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஜெரார்டோ என்று பெயரிடப்பட்டு, லீனாவின் தம்பியாகவே நினைத்து அந்தக் குடும்பத்தினர் வளர்த்தனர். ஜெரார்டோவுக்கு 10 வயதாகும் போதுதான் லீனா தனது அக்கா அல்ல, தன் தாய் என்ற உண்மை தெரியவந்தது. துரதிர்ஷ்டவசமாக ஜெரார்டோ தனது 40-வது வயதில் எலும்பு நோய் காரணமாகக் காலமானார். சர்வதேச ஊடகங்கள் மற்றும் உலக நாடுகளின் அதீத கவனத்தை விரும்பாத லீனா மெடினா, பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து பெரு நாட்டில் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து வந்தார். பின்னர் 1970-களில் ரவுல் ஜுராடோ என்பவரைத் திருமணம் செய்து, தனது 30-களில் இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தார்.
