LATEST NEWS
“என் தந்தையுடன் படு” பாகிஸ்தானில் பயங்கரம்… லேட்டா சாப்பாடு போட்டதால் விவாகரத்து – மனைவியை தந்தையோடு ‘ஹலாலா’ செய்ய வைத்த கணவன்..!
பாகிஸ்தானில் உணவு பரிமாற தாமதமானதால் தனது மனைவியை விவாகரத்து செய்த முகமது என்ற நபர், பின்னர் அவளை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்க ஷரியத் சட்டத்தின் கீழ் ‘ஹலாலா’ (Halala) சடங்கு செய்ய வற்புறுத்திய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷரியத் சட்டத்தின்படி, விவாகரத்து செய்யப்பட்ட பெண் தன் கணவனுடன் மீண்டும் சேர வேண்டும் என்றால், அவள் மற்றொரு நபரைத் திருமணம் செய்து, அவருடன் உடலுறவு கொண்டு, பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும். இந்தச் சடங்கைச் செய்ய அந்தப் பெண் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த முகமது, அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தித் தனது சொந்தத் தந்தையுடனேயே (மாமனார்) ஹலாலா செய்ய வைத்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் பாகிஸ்தான் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
