LATEST NEWS
தமிழக அரசியலில் வெளிநாட்டு சதி..? முதல்வர் விஜய்க்கு ஆதரவான சோசியல் மீடியா பக்கங்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கம்..? அரசியல் வட்டாரத்தில் கிளம்பிய புது சர்ச்சை ..!!
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் சில குறிப்பிட்ட பக்கங்கள், பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும், இணையதளவாசிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த இத்தகைய பக்கங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்ற கோணத்தில் பல்வேறு தரப்பினரும் தற்போது தீவிரமான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தின் பின்னணி, பக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இருப்பினும், தேசிய பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றப் பிரிவைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அல்லது உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
