LATEST NEWS
“CM விஜய் அமெரிக்க அதிபர் கூட ஆகட்டும், ஆனால்…” போஸ்டர் சர்ச்சைக்கு நடுவே விஜய்க்கு அன்பில் மகேஸ் வைத்த செக்..!!
தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டு, முதல்வர் விஜய் இந்தியப் பிரதமராகவோ அல்லது அமெரிக்க அதிபராகவோ கூட ஆகட்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய் எதிர்காலத்தில் பிரதமராவார் என அவரது கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அன்பில் மகேஸ் இந்தச் சாடலை முன்வைத்துள்ளார். முதலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாகச் செய்து முடிப்பதே தற்போதைய முக்கிய கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளைத் திசைதிருப்பாமல், அமைச்சர்கள் அதற்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தின் ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அன்பில் மகேஸ் தனது உரையில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
