LATEST NEWS
என்ன கொடுமை சார் இது..? ரயில்வே பெட்ஷீட்டை சால்வையா மாத்தி மார்க்கெட்ல உலா வந்த மூணு பேரு.. TAX கட்டுறோம்ல.. போர்வை எடுத்தா என்ன..? திருட்டை நியாயப்படுத்திய நெட்டிசனுக்கு வெளுத்து வாங்கிய கமெண்ட்கள்..!!
ரயில்வே போர்வையை சால்வையாகப் போர்த்திக்கொண்டு மூன்று நபர்கள் பொதுவெளியில் உலா வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெள்ளைத் துணியில் ‘வெஸ்டர்ன் ரயில்வே’ என்ற முத்திரை தெளிவாக அச்சிடப்பட்டிருந்ததால், அது ரயிலில் இருந்து திருடப்பட்டது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், மக்களின் பொதுப் பண்பாடு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியான தகவல்கள், ரயில்வேயில் நடக்கும் பிரம்மாண்ட திருட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. கடந்த ஜனவரி 2022 முதல் மே 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் இருந்து சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் தலைகாணி உறைகள் திருடப்பட்டுள்ளன.இத்தகைய தொடர் திருட்டுகள் காரணமாக இந்திய ரயில்வேக்கு ரூ. 104.51 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதில் 41 லட்சத்திற்கும் அதிகமான சலவை துணிகளும், 46 லட்சத்திற்கும் மேற்பட்ட முகத்தைத் துடைக்கும் துண்டுகளும் மாயமாகியுள்ளன. பொதுச் சொத்தை இவ்வாறு திருடி, அதை அன்றாட உடைகளாகப் பயன்படுத்தும் அவல நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
